தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கர் படுகொலையை கண்டித்து பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பிச்சை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொலை செய்தவர்களை உடனடியாக காவல் துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலைவாணன், குணசேகரன், முருகையன், செல்வ கணேஷ், மணிகண்டன், ஸ்ரீதர் பார்த்திபன், தமிழ்ச்செல்வன், சுகுணா ராஜகுமாரி மற்றும் பலர் கலந்து கொண்டு சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து கொலை செய்த நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.