பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட
எறையூர் அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில்,
“தேர்வை வெல்வோம்”என்ற நிகழ்ச்சியில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா விடை தொகுப்பினை”போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெகதீஸ்வரன், மாவட்ட கழக பொருளாளர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அமைச்சர் சிவசங்கரன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டி வினா விடை தொகுப்பினை வழங்கினார்.

Share this to your Friends