தென்காசி மாவட்டம் மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது.
இதில் மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி சுற்றுப்புற சுழல் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் திருநெல்வேலி கல்வி மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செல்வின் சாமுவேல் விளக்க உரையாற்றினார் தென்காசி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன் மரம் வளர்ப்பதன் அவசியம் பற்றி கூறினார் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் தொகுத்து வழங்கினார்.
துணிப்பைகளை முதன்மை கல்வி அதிகாரி சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முருகன் அவர்களுக்கு வழங்கினார் மேலும் தென்காசி மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் துணிப் பைகள் வழங்கி சுற்றுசூழல் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.