திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் சாமகாட்டுபள்ளத்தை சேர்ந்த செல்வம் வீட்டிற்கு பச்சமலையான் கோட்டையைச் சேர்ந்த துரைராஜ்(39) போலீஸ் உடையுடன் பழநி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி சென்று செல்வம் மீது வழக்கு உள்ளதாகவும், எஸ்.பி., புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்ததாகவும் கூறினார். மேலும் வர மறுத்தால் அடித்து இழுத்துச் சென்று ஜெயிலில் அடைத்து விடுவேன் எனவும் மிரட்டி மாதம் ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் எனவும் கூறினார்.
துரைராஜ் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த செல்வம் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து சென்ற கொடைக்கானல் போலீசார் போலி எஸ்.ஐ., துரைராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.