திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழ்நாடு அரசு 31/12/2024 அரசாணை வெளியிட்டு ஆறு வார காலத்திற்குள் கிராம பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை மனுவாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைக்க மறுப்பு தெரிவித்து மதுராபுரி ஊராட்சி மீட்பு குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.மதுராபுரி ஊராட்சியில் 26/01/2025 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டதில் சட்ட முழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அன்று மனுவினை தீர்மானத்தில் ஏற்கவில்லை.
இதனால் பிப்ரவரி 4 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக மதுராபுரி ஊராட்சி மீட்பு குழுவினர் அறிவித்திருந்தனர்.இதனை தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மோகன் தலைமையில் பிப்ரவரி 3ந் தேதி மாலை 6 மணியளவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.கூட்டத்தில் மதுராபுரி ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் மதுராபுரி கிராம மக்களின் மனுவை கிராம சபை கூட்டத்தில் பதிவுகள் ஏற்படுத்தி பரிசீலனை செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார்.
இதனால் பிப்ரவரி 4 ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார், ஊராட்சி செயலர் கண்ணதாசன்,நகரமைப்பு ஆய்வாளர் சந்திரா,வருவாய் ஆய்வாளர் அருள்பாரதி, வெங்கடேசபுரம் விஏஓ சுந்தர்ராஜ் மற்றும் மதுராபுரி ஊராட்சி மீட்பு குழுவை சேர்ந்த மகேஸ்வரன், முத்தமிழ்செல்வன்,செந்தில்குமார்,ரஹமதுல்லா,உமாபதி,தம்பிதுரை,
கவியரசன்,சீதர்.க.மணிமாறன்,மா.குமார்,சக்ரவர்த்தி மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.