கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பல்வேறு கிராமத்தில் இருந்து மக்கள் நகரத்திற்கு வருவதால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் காவல்துறையினர் பாலக்கரையிலிருந்து ஜங்ஷன் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றினர்.
நகரில் உள்ள வியாபாரிகள் தங்களின் பேனர்கள் போர்டுகளை சாலையில் வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.அந்த பேனர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர்.தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது வழக்குகள் பதியப்பட்டது
வியாபாரிகளின் கடையை உட்புறமாக எடுத்து வைக்க டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அறிவுறுத்தி சென்றனர் இதனால் ஜங்ஷன் சாலையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.