தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் ஊராட்சியில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பல்வேறு இடங்கள் ஆகியவற்றில் உள்ள பிளாஸ்டிக்கை சேகரிக்கும் பணி நடைபெற்றது,
இப்பணியில் ஊராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமை வகித்தார், ஊராட்சி செயலர் செயலாளர் ஆனந்த், 100 நாள் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு குறித்தான நெகிழியை ஒழிப்போம் புவியை காப்போம், குறைந்த பிளாஸ்டிக் அதிக வாழ்க்கை, நெகிழியை ஒழித்து திருவாரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.