மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக கேரளாவை சேர்ந்த சித்ரா விஜயன் இன்று பொறுப் பேற்றார்.
மதுரை மாநகராட் சியின் கமிஷனராக 2.2.2024ல் தினேஷ் குமார் பொறுப்பேற்றார். மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றுவது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைள் துவங்கி, வரி வசூல் வரையிலும் மாநகராட்சியில் இருந்த பல்வேறு தடைகளை கண்டறிந்து, இவற்றை சரி செய்யும் நடவடிக் கைகளில் முழு தீவிரம் காட்டினார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இதையடுத்து தமிழ்நாடு மின் ஆளுமை துறை இணை இயக்கு நரான சித்ரா விஜயன் மதுரை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப் பட்டுள்ளார்.

கேரளா மாநிலத்தை சேர்ந்த சித்ரா விஜயன் 2019ல் ஐஏஎஸ் அதிகா ரியாகி, திருச்சி, தர்மபுரி சப்-கலெக்டராக, ஊரக மேம்பாட்டு மற் றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் என பணிகளை மேற்கொண்டவர். 1971ல் நகராட்சியிலிருந்து மாநகராட் சியாக மதுரை ஆனது. இதுவரை 70 ஆணையர்கள் நியமனமான நிலை யில், 71வது ஆணையராக மாநகராட்சி வரலாற்றில் முதல் பெண் ஆணையர் என்ற பெருமையுடன் இன்று பொறுப்பேற்றார்.

Share this to your Friends