R. கல்யாண முருகன் செய்தியாளர்.விருத்தாசலம்
விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2024 – 2025 ம் ஆண்டுக்கான பொது நிதியில் கட்டப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா மற்றும் மோட்டார் அறை, அறிவு களஞ்சிய புத்தக அறை 13வது வார்டு முழுவதும் கண்காணிப்பு கேமரா துவங்கி வைக்கும் நிகழ்ச்சி ஆழியார் மடம் வீதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கி புதிய கட்டிட கல்வெட்டை திறந்து வைத்தார்.
நகர மன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி நகராட்சி பொறியாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.
ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ் அறிவுக்களஞ்சிய புத்தக அறையையும் நகராட்சி ஆணையர் பானுமதி குடிநீர் சுத்திகரிப்பு அறையையும் ஜே சி கேஸ் உரிமையாளர் சந்திரன் குடிநீர் அறையையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர வர்த்தகர்கள் நல சங்கத் தலைவர் கோபு செயலாளர் தமிழ்வாணன், மணிவண்ணன் பொருளாளர் சேட்டு முகமது விஜய் ஸ்டைல் உரிமையாளர் ரவிச்சந்திரன், சுந்தர்ராஜன், தமிழ்வாணன் அருண்குமார், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகர மன்ற உறுப்பினர் கருணாநிதி நன்றி கூறினார்.