தாராபுரம் நகர அரிமா சங்கம் மற்றும் ஜி.எம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய திருப்பூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் மற்றும் பொது பிரிவினர்களுக்கான செஸ் போட்டி .

தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள லயன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.அதில் 9 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மற்றும் பொதுபிரிவினர்களுக்கு என தனித்தனி பிரிவுகளில் செஸ் போட்டிகள் நடைபெற்றன.போட்டிகளை அரிமா மாவட்ட தூதுவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நகர அரிமா சங்க தலைவர் சிவக்குமார்,மாவட்ட தலைவர் செந்தில்குமார், லயன்ஸ் பள்ளி நிர்வாகி தங்கராஜ்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செஸ் போட்டியில் பள்ளி மாணவ -மாணவிகள் மற்றும் பெரியவர்கள் என 194 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாலை நடைபெற்றது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அரிமா சங்க மாவட்ட தூதுவர் கோபாலகிருஷ்ணன், விவேக் ரியல் எஸ்டேட் ரத்தினசபாபதி, சூர்யா பேக்கரி முருகேசன், எம். ஆர். கே சிவில் கன்ஸ்ட்ரக்சன் ராமகிருஷ்ணன்,நேதாஜி தங்க மாளிகை பாலசந்தர் ஆகியோர் முதல் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

அதுபோன்றுஇரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு அரிமா மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட தலைவர் (நமது பள்ளி திட்டம்) செந்தில்குமார், இன்ஜினியர் சுரேஷ்குமார் ஆகியோர் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.இதில் அரிமா சங்க நிர்வாகிகள் முகமது அப்துல் காதர்,ஸ்ரீனிவாசன்,ராமச்சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஜி.எம். செஸ் அகாடமி தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் கவிராஜ்,போட்டித் தலைமை நடுவர் கோபி கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *