தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகே தி.மு.க நகர கழகம் சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு தாராபுரம் நகர கழக செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கமல கண்ணன்,நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகர் வரவேற்றார். தலைமைக் கழக பேச்சாளர் கனகராசன் கலந்துகொண்டு பேசியதாவது :-தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்திற்கு ரூ. 600 கோடி செலவு செய்து சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் விபத்தில் பாதிப்படைந்தோருக்கு தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை.அளிக்கப்படுகிறது.கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் கிராமங்களில் மருத்துவ சிகிச்சை முகாம்.நடத்தப்படுகிறது.இவ்வாறு மக்களுக்கான அரசாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு
மதத்தை வைத்தே அரசியல் செய்கிறது.
அவர்களோடு கூட்டணி வைத்து அ.தி.மு.கவினரும் தமிழகத்தை சீர்குலைக்க பார்க்கின்றனர்.
எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொற்கால் ஆட்சி தொடர்ந்திட திமுக விற்கு வாக்களியுங்கள் என அவர் பேசினார்.இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், நகர அவைத் தலைவர் கதிரவன் ,நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர், கொளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் துரைசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 9-வது வார்டு கிளைச் செயலாளர் மயில்சாமி நன்றி கூறினார்.