விவசாயப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கண்டறிய வேளாண் மாணவ மாணவியர் கிராமங்களில் களஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் வேளாண் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக கடந்த ஆண்டு சேர்ந்த92 மாணவ மாணவியர் , வேளாண் விரிவாக்கத்தின் அடிப்படைகள் என்ற பாடத் திட்டத்தை அக்கல்லூரியின்இணை பேராசிரியர் டாக்டர் எஸ். அனந்த்குமார் தலைமையில் பயின்று வருகின்றனர்.
விவசாயிகளுக்கு உகந்த விரிவாக்கப் பணிகளை சரியாக திட்டமிடுவதற்கு ஏதுவாக வேளாண் பிரச்சனைகள்மற்றும் அதற்கான தீர்வுகளை மாணவ மாணவியர் களப் பணி செய்து கண்டறிவது அப்பாடத் திட்டத்தின்ஒரு நோக்கம்.
அதனால், தென்னங்குடி மற்றும் அகலங்கன்னு கிராமத்தில் நேரடி அனுபவ பயிற்சியினை மேற்கொண்டனர்.
காரைக்கால் மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத்தின் தலைவரும், புதுச்சேரி அரசின் நிலத்தடிநீர் ஆணையத்தின் உறுப்பினரான, நெடுங்காடு கிராமத்தை சேர்ந்த டி.என்.சுரேஷ் பயிற்சியை ஒருங்கிணைத்தார்.
அகலங்கன்னு கிராமத்தை சேர்ந்த திரு. நாகராஜன், திருமதி தாமரைச் செல்வி, திரு. பிரபாகரன்,தென்னங்குடி கிராம திரு. கணேசன், திரு. கேசவன், செல்லூர் திரு. சேகர், கோட்டாப்படிதிரு. ராஜேஷ் ஆகிய முன்னோடி விவசாயிகள் மாணவ மாணவியருக்கு விவசாய பிரச்சனைகள் மற்றும்தீர்வுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
பருவநிலை மாற்றத்தின் சீற்றம் காரணமாக விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைகிறது. உதாரணமாக,அண்மையில் பெய்த திடீர் கன மழையால் விவசாயிகளின் பருத்தி பயிரில் சப்பைகள் உதிர்ந்துகிடப்பதை மாணவ மாணவியர் பார்வையிட்டு அறிந்தனர். அதுபோல பருவநிலை சீற்றத்தால் ஏற்படும்பாதிப்புகளுக்கு உடனுக்குடன் இழப்பீடு வழங்க வேண்டும்.
பருத்தியில் சப்பாத்தி பூச்சி, இலைப்பேன், பால் பூச்சி, வெள்ளை ஈ போன்ற பிரச்சனைகளுக்குஉரிய ஆலோசனைகள் மற்றும் இடு பொருட்கள் வேண்டும்.
விவசாய பணியாளர்கள் தட்டுப்பாடு அதிகம் என்பதால் விவசாயம் செய்வது சிரமம் ஆகிவிட்டது.உற்பத்தியை பெருக்க நூறு நாள் வேலைத் திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
மேலும் விதைப்பது முதல் அறுவடை மற்றும் பின்செய் நேர்த்திகள் வரை அனைத்து பணிகளை காலத்தேசெய்து முடித்து விவசாயிகள் பயனடைய பல வகை இயந்திரகளை உபயோகத்திற்கு பற்றாக்குறை இல்லாமல்வழங்க வேண்டும்.
விளைவித்த நெல்லை விற்க முடியவில்லை. நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு, நடைமுறைகளைதாராளமயமாக்கி தளர்த்தி, குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க நடவடிக்கை தேவை. மக்களுக்கு விநியோகிக்கப்படும் இலவச அரிசி, உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக இருந்தால் அனைவருக்கும் பயன் கிடைக்கும், என்று பல்வேறு பிரச்சினைகளையும், தீர்வுகளையும் விவசாயிகள் மாணவ மாணவியரிடம் தகவல் பகிர்ந்தார்.
அகலங்கன்னு விவசாயி புனிதவதி இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரியநெல் ரகமான கருப்பு கவுனி அரிசியில் பாயாசம் செய்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விழிப்புணர்வு கருதி விலை இல்லாமல் விநியோகித்தார். அதேபோல், உள்ளூர் ரகமான பேட்டைகிராம கத்திரிக்காயின் மதிப்பை அறிய பல மாணவ மாணவியருக்கு இலவசமாக பகிர்ந்தார்.
மாணவிகள் தேவதேவயானி, ஐஸ்வர்யா, ஜெயம் மற்றும் சைலப்பிரியா பயிற்சியின் தகவல், தரவுகளை ஆவணப்படுத்தினர்.
முரளிதரன், ஹரிபிரசாத், அக்ஷயா மற்றும் லோச்சனா களப்பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னதாக அனைவரையும் மாணவி கார்த்திகா வரவேற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவி லக்ஷயாநன்றியுரைத்தார்.