விருத்தாசலம் செய்தியாளர் R. கல்யாண முருகன்.
மங்கலம்பேட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,
ரூ.2 கோடியே 1 லட்சம் மதிப்பில், தினசரி காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டுவதற்கு பூமி பூஜை
மங்கலம்பேட்டை
கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை பேரூராட்சி, தேரடி பகுதியில், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த தினசரி காய்கனி மார்க்கெட் கடைகள் நாளடையில் பழுதடைந்துப் போனது.
இதனையடுத்து, 2024-2025 -ஆம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியே 1 லட்சம் மதிப்பில், மங்கலம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில், 8 இறைச்சிக் கடைகள் உட்பட 32 தினசரி காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி மன்றத் தலைவர் சம்சாத் பாரி இப்ராஹிம் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் செல்வம், தி.மு.க., வழக்கறிஞர் அணி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பாரி இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் அனைவரையும் வரவேற்றார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு, செங்கல்லை எடுத்துக் கொடுத்து பூமி பூஜை அடிக்கல் நாட்டினார். விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சிவாச்சாரியார் சுந்தர முருகன் குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் பூமி பூஜையினை நடத்தி வைத்தனர்.
இதில், இளநிலைப் பொறியாளர் அன்புக் குமார், திமுக பேரூர் அவைத் தலைவர் முஹம்மது யூசுப், ஒன்றிய பிரதிநிதி கோமணி, தி.மு.க., வர்த்தகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மலர்சேகர், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பட்டி.வசந்தகுமார், காங்கிரஸ் கட்சி பேரூர் தலைவர் வேல்முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வி,மகாலட்சுமிசக்திவேல், நூருல்லா, உமர்பாரூக், நசீமாஅசன்முஹம்மது, திமுக இளைஞரணி அமைப்பாளர் அப்துல் அஜித், துணை அமைப்பாளர்கள் அப்துல் சமது, விக்ரம், மகளிரணி நிர்வாகிகள் சரளாதேவி, முத்துலட்சுமி, நஜீர்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.