தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்காக பிரச்சார இயக்கம்…..
மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியம், வடக்கு வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டின் மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் 20000 ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணியில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர் களையும் பங்கேற்க செய்ய பிரச்சார இயக்கம்.
வரும் மே மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மாநகரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பாதுகாப்போம்,
தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம், கட்டாய இந்தி திணிப்பை எதிர்ப்பது ஆகியவற்றை
வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டின் நிறைவு நாளான மே மாதம் 3- ம் தேதி 20,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளதால் , அந்த பேரணிக்கும் பொது கூட்டத்திற்கும் மதுரை மாவட்டத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களோடு பங்கேற்க செய்ய அழைப்பு விடும் பிரச்சார இயக்கத்தையும் மாநாட்டிற்கான சுவரொட்டி இயக்கத்தையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச்செயலாளர் சீனிவாசன், மேலூர் வட்டாரக்கிளை செயலாளர் சிவகுமார் ஆகியோர் இணைந்து மேலூர் ஒன்றியம் வடக்கு வளையப்பட்டி பகுதியில் ஆசிரியர்களை சந்தித்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சத்திய பாமா மற்றும் இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
பேரணிக்கும் பொது கூட்டத்திற்கும் அழைப்பு விடும் விதமாக மாநாட்டிற்கான லோகோ ஒட்டும் பணியை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் முருகன் ஆகியோர் இணைந்து தே.கல்லுப்பட்டியில் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், சீனிவாசன், எமிமாள் ஞானசெல்வி, தனபாக்கியம் ஆகியோருடன் வட்டார நிர்வாகிகள் அவ்வையார், ஆதி முருகன், குமார், முத்துசாமி, சுப்புராஜ், ஜெயக்குமார், தீபா, ரோஜா, பாண்டியன், ஜோசப் ஜெயசீலன், சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.