தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா கொடியேற்றம் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா மங்கல தேவி கண்ணகி விழா விழா பூமாரி விழா என்று பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் இதன்படி இந்த ஆண்டு வருகிற மே 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சித்ரா பௌர்ணமி முழுநிலவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
ஆண்டுதோறும் கண்ணகி கோவில் மலை அடிவாரத்தில் தமிழக பகுதியான கூடலூர் அருகே உள்ள பனியன் குடியில் கொடியேற்றம் செய்யப்படும். அங்கு இரு தரப்பினர்கள் இடையே கொடியேற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு கொடியேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு கொடியேற்றம் செய்வதை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்தது மேலும் அந்த பகுதியிலிருந்து கண்ணகி கோவில் பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர் அந்த பகுதிக்கு செல்லும் நுழைவாயில் பூட்டப்பட்டது இதை யடுத்து கண்ணகி கோவில் அறக்கட்டளையின் சார்பில் கம்பம் நகரில் உள்ள அறக்கட்டளை வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது
இந்த விழாவை ஒட்டி கண்ணகி உருவம் பொறித்த கொடி யுடைய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன இதன் பின்னர் அந்த வளாகத்தில் இருந்த கொடிக்கம்ப பத்தில் கொடி ஏற்றப்பட்டது இந்த விழாவிற்கு அறக்கட்டளையின் தலைவர் ராஜேந்திரன் ஜ.ஏ.எஸ் தலைமை வகித்தார்.
செயலாளர் ராஜ கணேசன் பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவரும் பெஸ்ட் மணி கோல்ட் அதிபருமான பி எல் ஏஜெகநாத மிஸ்ரா தேனி மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர் கே ஆர் ஜெயபாண்டியன் கூடலூர் நகராட்சி முன்னாள் தலைவர் ஜெயசுதா செல்வேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இதனைத் தொடர்ந்து கண்ணகி கோவில் பக்தர்கள் காப்பு கட்டி தங்களின் விரதத்தை தொடங்கினர் .