தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஏப்ரல்- 26. தஞ்சையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு, நம்மாழ்வார் சித்தரைத் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற நம்மாழ்வார் சித்திரைத் திருவிழாவிற்கு நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி. மகேந்திரன் தலைமை வகித்தார். அவரது தலைமை உரையில் இந்த விழா என்பது நம்முடைய எளிய மக்களால், அவர்களுடைய ஒத்துழைப்பால் ஒரு கருது கோளாக மாற்ற வேண்டும். அதனால் தான் இந்த விழாவை துவங்கினோம். இந்த நிகழ்வின் முதல் நாளிலேயே மக்கள் பேரணி நடைபெற்றது. விவசாயிகள் அதில் பங்கு பெற்றார்கள் நம்மாழ்வாருக்கு வீரவணக்கத்தை தெரிவித்தார்கள்.
நமது காவிரிக் கரையில் பிறந்து அண்ணாமலைப் பல்கலையில் இளங்கலை விவசாய பட்டம் பெற்ற நம்மாழ்வாரின் கருதுகோளை நாம் பிரகடனப்படுத்துகிறோம். நம்மாழ்வார் படித்து பணியாற்றுகின்ற காலத்தில் தான் பசுமை புரட்சி வந்தது. அப்போது நம்முடைய பாரம்பரியமான, இயற்கையான, நம்மால் மட்டுமே நடத்தக்கூடிய இந்த உழவுத் தொழில் அழிந்து கொண்டிருக்கிறதே என்று வேதனைப்படுகிறார். பசுமை புரட்சி மக்களின் பசியை போக்கியிருக்கிறது நான் மறுக்கவில்லை. ஆனால் நாட்டு மக்களை நோயாளிகளாக மாற்றி இருக்கிறது. நீங்கள் அறிவீர்களா? பசுமை புரட்சி வந்ததற்கு பிறகுதான் புற்றுநோய் பெரிய அளவில் இருக்கிறது என்பதை தமிழகம் அறிந்தது. அதற்கான காரணம் பசுமை புரட்சியின் ரசாயனம் என்று நம்மாழ்வார் கூறினார்.
நம்மாழ்வார் நடத்தியது முதல் புரட்சி என்றால் உலகில் நாம் இரண்டாவது புரட்சியை நடத்த வேண்டி இருக்கிறது. புரட்சி என்ற உடனேயே வெடிகுண்டு துப்பாக்கி என்று சிந்திக்க வேண்டாம். மனங்களின் மாற்றம், எளிய மக்களின் மாற்றம், கொள்ளையிலிருந்து விடுபடக்கூடிய மாற்றம், லஞ்சத்தில் இருந்து விடுபடக்கூடிய மாற்றம், பக்கத்தில் இருக்கிற ஒருவர் துன்பப்படுகிற போது நாம் உதவுவது தான் புரட்சி நம்மாழ்வார் அதை செய்தார். நாமும் அதை செய்ய வேண்டும். இந்த புரட்சியின் மூலம் தமிழக மக்களை ஒன்றிணைக்க வேண்டும். நம் உடல் மீதும், மண்ணின் மீதும் தொடுக்கப்பட்டிருக்கிற ரசாயன யுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும். நமது அரசியல் சாசனம் மக்களுக்கு தான் அதிகாரம் அளிக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு அல்ல. இன்றைக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அறிவு ஜீவிகளை மதிப்பதே கிடையாது. இந்த நிலை மாற வேண்டும். மக்களின் சிந்தனை மாற வேண்டும் என்று சி.மகேந்திரன் தனது தலைமை உரையில் பேசினார்.
நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தி.பாலதண்டாயுதம் வரவேற்புரை நிகழ்த்தினார். மேனாள் துணைவேந்தர் முனைவர் ஜவகர்நேசன் விழாவில் துவக்க உரை நிகழ்த்தினார். முற்போக்கு பெண்கள் சிந்தனையாளரும், திரைப்பட கலைஞரமான ரோகினி, உள்ளாட்சி செயல்பாட்டிற்கான மையத்தின் செயலாளர் முனைவர் தீபமாலா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
தமிழ் சான்றோர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாழ்நாள் முழுவதும் திருக்குறளும், நீதி நூல்களும் குறித்து உரையாடி வரும் நெய்வேலி தமிழ்ச்சங்கம் மேத்தாவணன்க்கு நிகழ்வில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மக்கள் கலெக்டர் மலையப்பன் விருது முன்னாள் ராமகிருஷ்ண குடில் மாணவர் சங்கத்தின் தலைவர்கள் வீரச்சந்திர பிரம்மச்சாரி, திருச்சி மூத்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் இயற்கை ஆர்வலர் தவமணி, தஞ்சை மாநகர துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர்கள் சேது. நாராயணன், த.கிருஷ்ணன், செ.சுதாகர், துரை.மதிவாணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர் முடிவில் க.தவச்செல்வன் நன்றி கூறினார்.
பசுமை புரட்சிக்கு பின்பு புற்றுநோய் பாதிப்பு அதிகம்! ரசாயன உரங்களை தவிர்ப்போம்! மண்ணை பாதுகாப்போம்!