மதுரை விளாங்குடி தேசிய நெடுஞ்சாலை யில் அ.தி.மு.க., சார்பில் ஏப்ரல் 20ம் தேதி அமைச்சர் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். உரிய அனுமதியின்றி பந்தல் வைக்கப்பட்டதாகவும், அதை மாநகராட்சி அகற்றுமாறும் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அ.தி.மு.க.,வினர் அகற்றாததால் போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் பந்தலை அகற்ற முற்பட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. கட்சியினர் ஈடுபட்டனர். மறியலில் வட்ட செயலாளர் சித்தன் தலைமையில் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்சியினர் கூறுகை யில், “மதுரை நகர் முழுவதும் அனுமதி யின்றி தி.மு.க.,வினர் நீர் மோர் பந்தல் வைத்துள்ளனர். மேற்கு தொகுதிக்குட்பட்ட விளாங்குடியில் மட்டும் பிரச்சனையை எழுப்புவதற்கு அமைச்சர் மூர்த்திதான் காரணம்.மேற்கு தொகுதி பொறுப்பாளரான பிறகு அவர் துாண்டுதலின் பேரிலேயே இது நடந்துள்ளது. இது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்” என்றனர்.