வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான சேவைகளை வழங்கி வரும் பழனிவேல் ஓவர்சீஸ் கல்வி நிறுவனம் கோவை அவினாசி சாலையில் தனது புதிய அலுவலகத்தை துவங்கியது….
வெளிநாடுகளில் சென்று உயர் கல்வி பயில்வதில் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழக மாணவர்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்..
இந்நிலையில் இது போன்ற வெளிநாடுகளில் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புடன்,நல்ல தரமான வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் விதமாக பழனிவேல் ஓவர்சீஸ் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது..
மதுரை,தஞ்சாவூர்,நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பழனிவேல் ஓவர்சீஸ் தனது புதிய கிளை அலுவலகத்தை கோவை அவினாசி சாலை வட்சுமி மில் பகுதியில் துவங்கி உள்ளது..
இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பி.எஸ்.ஜி.தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் எல்.கோபாலகிருஷ்ணன் மற்றும் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைத்தனர்..
நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக ஹல் பல்கலைகழகத்தின் சர்வதேச வேலை வாய்ப்பு அதிகாரி சுமில் மோண்டல், அலிக்ஸ் ராபின்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்…
புதிய அலுவலகத்தின் செயல்பாடு குறித்து பழனிவேல் ஓவர்சீஸ் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நடராஜன் பழனிவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வெளிநாடுகளில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பாதுகாப்புடன் உயர்தர கல்வி, சிறந்த தொழில் வாய்ப்புகளை எங்களது நிறுவனம் வழங்கி வருவதாக தெரிவித்தார்..
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா,அபுதாபி, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படிப்பதற்கான வாய்ப்புகளை எங்களது நிறுவனம் வழங்கிவதாக கூறிய அவர்,இதில் கல்வி உதவி தொகை தொடர்பான சேவைகளும் எங்களது நிறுவனமே செய்து தருவதாக தெரிவித்தார்..