18 அடி நீளம் 12 அடி அகலத்தில் பிரம்மாண்ட தேசிய கொடியை காகிதத்தில் அச்சடித்து உருவாக்கி அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் அச்சு தொழில் நுட்ப துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துறை சார்ந்த மாணவிகள் பிரம்மாண்ட தேசிய கொடியை 19 நிமிடங்களில் அச்சடித்து உருவாக்கி கலாம்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்…
கோவையை அடுத்த பன்னிமடை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தில் உள்ள அச்சக தொழில் நுட்ப துறை மாணவிகள் சார்பாக தேசிய கொடி வடிவமைப்பதில் புதிய உலக சாதனை செய்துள்ளனர்..
அச்சக தொழில் நுட்ப துறை குறித்தும் விழப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் விதமாக மாணவிகள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்..
அதன் படி 23 மாணவிகள. இணைந்து 18 அடி நீளம் 12 அகலம் கொண்ட பிரம்மாண்ட வெள்ளை காகிதத்தில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களை அச்சடித்து சாதனை செய்தனர்..
ஆல் இந்தியா ஃபெடரேஷன் ஆப் மாஸ்டர் பிரிண்டர்ஸ், ஸ்கிரீன் பிரிண்டிங் இந்தியா, திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேசன், மற்றும் இந்தியாவின் பல்வேறு வண்ண மை தயாரிப்பாளர்கள் இணைந்து நடத்திய ,இதன்
சாதனை துவக்க நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
இதில் அவினாசிலிங்கம் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் ,அவினாசிலிங்கம் பொறியியல் கல்லூரி டீன் சற்குணம்,அச்சு தொழில் நுட்ப துறை தலைவர் அருள் மொழி ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை நகழ்வை துவக்கி வைத்தனர்..
அதன் படி தேசிய கொடியில் வரும் மூவர்ணங்களான காவி,பச்சை,வெள்ளை போன்ற மூவர்ண மையை பயன்படுத்தி 19 நிமிடங்களில் அச்சடித்து தேசிய கொடியை உருவாக்கி கலாம்ஸ் உலக சாதனையில் இடம் பிடித்தனர்..
அச்சு தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துறை சார்ந்த மாணவிகள் மட்டும் இணைந்து அச்சடித்து உருவாக்கிய பிரம்மாண்ட கொடியை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்..