செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெற்றி அறிவொளி பயிற்சி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, அறிமுக பயிற்சி தொடக்க விழா என முப்பெரும்விழா நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அறிவொளி வெங்கடேசன் தலைமை தாங்கினார், எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக், தலைமை ஆசிரியர்கள் க.வாசு, இரா.தேன்மொழி. எஸ்.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி, நகராட்சி ஆணையர் ஆர்.சோனியா ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, போட்டித் தேர்வர்களுக்கு ஊக்கஉரை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏ.தசரதன், வந்தை குமரன், மனோஜ் ஆகியோர் பங்கேற்றனர்.