மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக நுட்புனர்கள் தினத்தையொட்டி அகில இந்திய மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தின் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இவ்விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, தலைமை தாங்கினார்

மருத்துவர் அனுப்பிரியா, முன்னிலை வகித்தார். ஆய்வக நுட்புனர்கள் சங்க மாநிலத் தலைவர் மரியதாஸ், வரவேற்று பேசினார் விழாவில் ஆய்வக நுட்புனர்கள் அலுவலகப் பணியாளர்கள் முன்பாக மருத்துவ அலுவலர்கள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். அதனைத் தொடர்ந்துகாசநோயாளிகளுக்கு சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய லேப் டெக்னீசியன்களுக்கு கேடயங்களை வட்டார மருத்துவர் வளர்மதி, மற்றும் மருத்துவர் அனுப்பிரியா, இணைந்து வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து மருத்துவமனை வளாகப் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது நிகழ்ச்சியின் முடிவில் அகில இந்திய மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் சங்க செயலாளர்
மேனில்பாபு, நன்றி கூறினார்..

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *