தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் பாமக வன்னியர் ஆலோசனைக் கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது அப்போது 2000-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் பகுதியில் இருந்து மாநாட்டிற்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க பெருவிழா மாநாட்டுக்கு திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பாமகவினர் வன்னியர்கள் பேருந்துகளில் செல்வதற்கான ஆலோசனைக் கூட்டம்
தென் தாரையில் உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளர் எம்.முருக சாமி தலைமை வகித்தார்.இதில் திருப்பூர் முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் அ. ரவிச்சந்திரன் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.
இளைஞர் சங்கம் மாநிலச் செயலாளர் முருகசாமி பேசுகையில்
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, மாமல்லபுரத்தில் 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் கடைசியாக நடைபெற்ற சித்திரை பெருவிழாவையடுத்து அந்த விழா, தொல்லியல் துறை தடை உத்தரவால் கடந்த 12 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு 11.05 .2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணிக்கு மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் சமூகநீதி காவலர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களும் இளைஞர்களின் எழுச்சி நாயகர் மாநாட்டு குழு தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டே மாநாட்டின் முக்கிய கோரிக்கைகளை எடுத்துரைக்க உள்ளனர்.
அதில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் வன்னியர்களுக்கு மக்கள் தொகை சமூக பின் தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அனைத்து சமுதாயங்களுக்கும் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு அதற்கு வசதியாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட உள்ளது.
எனவே திருப்பூர் கிழக்கு மாவட்டத்திலிருந்து தாராபுரம் குண்டடம் மூலனூர் போன்ற பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பேருந்துகளில் வரவேண்டும் எனவும் மேலும் மாநாடு பற்றி வன்னியர்களிடம் எடுத்துரைத்து எழுச்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் மேலும் மாநாடு தமிழக வளர்ச்சிக்கான மாநாடாக அமையும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் பிரவீன் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் வேன் நாட்ராயன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.