வால்பாறை – கருமலை முன்னாள் மாணவர்கள் நலச் சங்க முதலாம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் நலச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா அடுத்தமாதம் 10.11.ஆகிய இரண்டு தினங்களில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது இந்நிலையில் இவ்விழா சிறப்பாக நடத்த அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் கோவை வ.உ.சி.பூங்காவில் சங்கத்தின் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது இந்த ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் வேல் பாண்டி, பொருளாளர் ஆர்த்தி பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், ஆலோசகர்கள் பி.கே.மூர்த்தி, கே.மூர்த்தி, டேவிட் ராஜ் ராமர், முனியசாமி மற்றும் பொறுப்புகளும், நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்