கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நடத்திய துளிர் திறனறிவுத் தேர்வு நடைபெற்றது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நடைப்பெற்ற துளிர் திறனறிவுத் தேர்வினை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் அக்கச்சிப்பட்டி, முள்ளிக்காபட்டி , அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 37க்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினார்கள்.
அதன் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெற்ற தேர்வில் ஐன்ஸ்டீன் துளிர் இல்ல மாணவிகள் அமிர்த வர்ஷனி என்ற மாணவி ஒன்றிய அளவில் முதலிடமும், மாணவி கனிதா ஸ்ரீ என்ற மாணவி இரண்டாம் இடமும்,அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஜெயஸ்ரீ மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர்.
அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு துளிர் மாத இதழ் வழங்கி தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
துளிர் திறனறிவுத் தேர்வு எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு முன்னோட்டமாக அமையும். மாதம்தோறும் துளிர் மாத இதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.