மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு….
மதுரை சித்திரை திருவிழா துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை 4 அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர் பக்தர் களுக்கு தேவையான வச திகளை விரைந்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்
மதுரை சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது பிரசித்தி பெற்ற சித்திரை திரு விழா முன்னேற்பாடு பணிகள் மதுரையில் தீவிரமாக நடந்து வருகிறது
மீனாட்சி அம்மன் கோவில் வைகை ஆறு உள்ளிட்ட பகு திகளில் நடக்கும் திருவிழா பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்
அப்போது அவர்கள் கோரிப்பாளையத்தில் இருந்து ஆழ்வார்புரம் வழி யாக வைகை ஆற்றுக்கு நடந்து சென்று தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தையும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது திருவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
தென் தமிழகத்தில் மதுரை சித்திரை திருவிழா மிகவும் புகழ் பெற்றது இதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆய்வின்போது கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், நெடுஞ் சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ், கோட்ட பொறியாளர் மோகன் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை விரைந்து முடியுங்கள் என அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம் மன் கோவிலில் ஆய்வு மேற்கொள் வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்குமணி பழனி வேல் ராஜன், கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அமைச்சர்கள் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர். பின்னர் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடனே அமைச்சர் சேகர் பாபு, அதிகாரி களிடம், கும்பாபி ஷேகத்திற்கு முன்பு மண்டபம் சீரமைப்புப்பணி களை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். கற்களால் தான் தாம தம் என்பதால் மண்டபத் திற்கு தேவையான கற்களை வேறு இடங்களில் இருந்து பெறுமாறு அமைச்சர் மூர்த்தி ஆலோசனை வழங்கினார்.
பின்னர் சித்திரை திருவிழா தொடர்பாகமீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருவள்ளுவர் கழகம் அரங்கில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.