தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மணலூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா …..

திருளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மணலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேரோட்டத் திருவிழாவை விமர்சியாக நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு பூச்சொறிதல் ,மற்றும் சந்தனம் மஞ்சள் பால்உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது,.
அதனைத் தொடர்ந்து 2டன் எடையுள்ள இரும்பு சங்கிலியால் தேரில் பொருத்தி கோவிலின் முக்கிய வீதிகள் வழிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஏற்பாடுகளை மணலூர் கிராமவாசிகள் நாட்டாமைகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்தனர்.