எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி பசுமைத்தாயக அமைப்பினர் மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம்.பழமையான மரங்களை மாற்று நடவு செய்ய கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகர் பகுதியிலிருந்து சட்டநாதபுரம் வரை சாலை விரிவாக்க பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை விரிவாக்க பணிக்காக 100 ஆண்டுகளுக்கு மேல் சாலை ஓரத்தில் உள்ள பழமையான வேப்பமரம் மற்றும் புளிய மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மரங்களை வெட்டாமல் உயிருடன் எடுத்து மறு நடவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பசுமை தாயாக அமைப்பினர் தென்பாதி பகுதியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகையுடனும் வெட்டப்பட்ட மரத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாலையுடன் மரங்களை வெட்டியதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.
வெட்டி பாதியில் நிறுத்தப்பட்ட வேப்ப மரத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர்.மேலும்சங்குஊதி பெண்கள் மஞ்சள் குங்குமம் தடவி பாலூற்றி ஒப்பாரி வைத்து அழுதனர். இதில் கலந்துகொண்ட பசுமைத்தாயக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐநா.கண்ணன் பழமையான மரங்களை வெட்டுவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.பள்ளி வளாகம் பூங்கா குளக்கரை ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மறு நடவு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.இதில் பசுமைத்தாக அமைப்பினர் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.