செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட
பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஆகியோரின் ஆணைக்கினங்க தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 650 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான கட்டுமான பணிகளை உதவி திட்ட இயக்குநர் பரணி
ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரிசங்கர் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமரா,சிவகலைச்செல்வன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மல்லிகாமணி ஊராட்சி செயலர் ஏழுமலை
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.