விருத்தாசலம்,
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கடலூர் மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அய்யாயிரம் முன்னிலை வகித்தார். கடலூர் மைய மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி மொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஒன்றிய செயலாளர் திருஞானம், துணை செயலாளர் தென்றல், ஒன்றிய பொருளாளர்கள் எழில்வான் சிறப்பு, சக்திவேல், நிர்வாகிகள் அய்யாதுரை, பாஸ்கர், வழக்கறிஞர்கள் மதுசூதனன், தன்ராஜ் , மற்றும் விஜயகுமார், வீரமணி, துரைமுருகன், இளங்கோவன், பாபு, சங்கர், அருள் சுகன், கவியரசன், அன்வர் பாஷா, ரியாஸ், அகத்தியன், பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.