விருத்தாசலம், ஏப். 15:

டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம் நகர திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, சுரேஷ், ஆசைத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆதிதிராவிட நல குழு மாவட்ட அமைப்பாளர் ராமு அனைவரையும் வரவேற்றார். விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சதீஷ்குமார், வழக்கறிஞர் அணி அருள்குமார், ரவிச்சந்திரன், இலக்கிய அணி பட்டி கருணாநிதி, அறிவுடை நம்பி, கொளஞ்சியப்பன், ராதாகிருஷ்ணன், கார்த்திக், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், பழனிச்சாமி, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல், இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், சந்தான லட்சுமி சுந்தரமூர்த்தி, சாரங்கபாணி, முத்து, நகர இளைஞரணி பொன் கணேஷ், தளபதி குமார், தளபதி, மணிவண்ணன், பாரதி, காந்தி, டைலர் சிவா, பரந்தாமன், ராஜா கோவிந்தன் பாலு சங்கர் ராஜ்குமார் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்க அன்பழகன், ராசாத்தி சரவணன், வசந்தி புருஷோத்தமன், அறிவழகி முருகன், தீபா மாரிமுத்து, விஜி , வீரமணி, கார்த்திக், வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends