மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா…..

மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அரவிந்த் கண் மருத்துவமனையின் இயக்குனர் துளசிராஜ் , நிர்வாக இயக்குனர் ஷியாம் பிரகாஷ் குப்தா ,ஆனந்த் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கணேசன், மதுரை உயர்நீதிமன்ற கிளை மூத்த வழக்கறிஞர் சாமிதுரை மற்றும் சமூக ஆர்வலர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Share this to your Friends