காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கார பந்தலில் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக துணை செயலாளர் செந்தில் ராஜன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் திருமால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்,
இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி.சி. தனசேகரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் தண்டலம் கோபிநாத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
