பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலை பால்குடம் எடுக்கும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பால்குடம் ஊர்வலமாக சென்று 12 மணி அளவில் கோவிலை வந்தடையும். பிறகு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மதியம் அன்னதான நிகழ்வும், இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும். அம்மன் அருள் பெற பக்தர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.