அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அ.புதுப்பட்டி கிராமத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் பாண்டுரங்கன் வரவேற்றார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில அம்மா பேரவை துணை செயளாலர் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா, மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயளாலர் ஜெயச்சந்திரமணியன், மாவட்ட விவசாய அணி குமார், மனோகரன், கிளை கழக பிரதிநிதி முத்துகுமரன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அய்யங்கோட்டை, மேலச்சின்னணம்பட்டி ஆகிய கிராமங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.