தலைவ நாயக்கன் பட்டி காளியம்மன் கோவில்முளைப்பாரி ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.
முன்னதாக பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
பின்னர் அக்னிசட்டி நேர்த்திகடன் ஏராளமானோர் செலுத்தினர். பின்னர் கோவிலில் இருந்து மேளதாளம், வான வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று குண்டாற்றில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.