திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருடா வருடம் புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு பங்குனி உத்திர காவடி திருவிழா இந்து முன்னணி சார்பில் சீரும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த வருடம் பங்குனி உத்திரம் காவடி ஊர்வலம் நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து கேரளா செண்டை மேளம் முழங்க பட்டாசு மேளதாளத்துடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடி, பறவை காவடி மற்றும் வேல் குத்தி காவடிகள் ஏந்தி பத்தர்கள் வந்தனர் வரும் வழியில் ஏரிச்சாலை நகராட்சி முன்பாக கடுமையான வெயிலில் நடந்து வந்த பக்தர்களுக்கு கொடைக்கானல் நகராட்சி நகர் மன்ற தலைவர் பா செல்லத்துரை துணைத் தலைவர் மாயக்கண்ணன் பத்தர்களுக்கு பழச்சாறு வழங்கினார்கள்

அதன் பின்னர் 7 ரோடு சந்திப்பு, அண்ணா சாலை வழியாகவும் மேலும் இந்த வருடம் கடுமையான வெயில் காரணமாக சாலை சூட்டை தவிர்ப்பதற்காக நகராட்சி சார்பில் தண்ணீர் லாரியில் சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு அதன் பின்னர் பக்தர்கள் காவடி எடுத்து அணிவகுத்து குறிஞ்சி ஆண்டவர் வந்து அடைந்தனர் அதன் பின்னர் முருகனுக்கு பல்வேறு விதமான பூஜைகள் செய்யப்பட்டு ஆராதனைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு முருகன் அருள் பாலித்தார் அதன் பிறகு, காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கினார்கள். மேலும் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this to your Friends