பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 27 -ம் ஆண்டு விழா கோலாகலமாக பள்ளி தாளாளர் காஜா முகைதீன் தலைமையில் நடைப்பெற்றது.
இவ்விழாவில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் பள்ளி குழந்தைகள் பட்டாம்பூச்சியாய் சிறக்கடித்து வண்ணமயமான நடனம் மற்றும் சாகச நிகழ்ச்சிகளை செய்தி காட்டி காண்போர்களை கவர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பூங்குழலி கபிலன், ஓஏஜே.முகமது பாரூக், முகமது ரபி, சாப்ஜான் ,ஸ்ரீ கீர்த்திகா, மற்றும் பள்ளி முதல்வர்கள், லயன்ஸ் ,ரோட்டரி சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.