தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் திமுக அரசின் கீழ் உள்ள வனத்துறை அமைச்சர் பொன்முடி கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் சி. மகேந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
தாராபுரம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சி வளாகம் முன்பு
பெண்களையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசியுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க அரசை கண்டித்து வனத்துறை அமைச்சர் பதவிலிருந்து உடனடியாக விளக்கவும், அனைத்து பெண்களிடம் மன்னிப்பு கூறவும் அ.இ.அ.தி.மு.க மகளிரணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துத்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில், புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி,அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட மகளிரணி செயலாளருமான திருமதி.ரேவதி குமார்,நகர செயலாளர் சி.ரஜேந்திரன்,அதிமுக மாவட்ட சேர்மன் திருமதி சத்தியபாமா, மாவட்ட கவுன்சிலர் திருமதி பானுமதி கருணாகரன் ஒன்றிய செயலாளர்கள் ஜி.ஆர்.பாலகுமாரன், ரமேஷ், செல்வகுமார, ஆகியோர்களின் முன்னிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், மகளிரணி, சார்பு அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் – நிர்வாகிகள், கிளைக்கழக, வார்டு கழக செயலாளர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 1000க்கு மேற்பட்டோர்கள் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பதிவு செய்தனர்.