இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மின்சார வாரியம் எதிரே பரமக்குடி செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்ட முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தினமான இன்று சர்குருநாதர் பாலகுருசாமி, குருநாதர் திருமால் தலைமையிலும், துணைக் குருநாதர் புயல்நாதன், கெளரவத்தலைவர் தாமோதரன் முதுவை சாஸ்தா அறக்கட்டளை தலைவர் கண்ணதாசன், செயலாளர் அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலையிலும் பிள்ளையார்பட்டி விகாஸ்ரத்னா டாக்டர் சிவஸ்ரீ பிச்சைகுருக்கள் தலைமையிலான குழுவினர்கள் கன்னிமூல கணபதி, மஞ்சமாதா, நாகர், நவகிரகங்கள், ஸ்ரீ தேவி, பூ தேவி, வரதராஜ பெருமாள், ஞானேஸ்வர், பாலமுருகர், துர்க்கை, பெரிய கருப்பண்ணசாமி, கொச்சுகடுத்த சாமி, கருப்பாயி அம்மன், கும்பாபிஷேக விழாவை நடத்தினர்.
நான்காம் யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனைகள், நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அனைத்து அரசியல் கட்சியினர், சிறப்பு அழைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், முதுவை சாஸ்தா அறக்கட்டளை நிர்வாகக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாபெரும் அன்னதானம் நடைபெற்றது