ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் குண்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே போல் இந்த ஆண்டும் குண்டம் பெருந்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் கோதுமை பிரட் , பழ வகைகள் போன்றவை சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் , மாவட்ட கெளரவ செயலாளர் மாரப்பன் மற்றும் மாவட்டம் மகளிர் அணி செயலாளர் பிரியா தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் சேகர், நடராஜ் ஒன்றிய பொறுப்பாளர்கள் குப்புராஜ் , ராஜேந்திரன் , ஆறுமுகம் , கோவிந்தராஜ் ,மோகனப்பிரியா , சொர்ணா , தமிழ்வாணன் ,சௌந்தர்ராஜன் மற்றும் உறுப்பினர்கள் , மகேஸ்வரி ,ராதாமணி , தங்கம்மாள் , புவனேஸ்வரன் , சரஸ்வதி , ஜானகி , ஸ்ரீதேவி ,ராதிகா , பழனியம்மாள் ,ஜோதி ,விஜயகுமாரி , இளவரசன்,மகாலட்சுமி, பிரபு, சீனிவாசன், சுருதி ,வேலுச்சாமி, கோகுல், பாலா, அசோக் ,கௌதம்,ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.