தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் தீனதயாள் உபாத்தியாயா 108-வது ஜெயந்தி மற்றும் மகன் பாவேஷ் மோகனின் 10-வது பிறந்தநாள் ஆகிய இரு விழாவினை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் மற்றும் ஒப்பந்தக்காரர் கே.எஸ்.பாரதிமோகன் செய்திருந்தார்.
கோடை காலத் தண்ணீர் பந்தல் 31-ஆம் ஆண்டு திறப்பு விழாவிற்கு சமூக சேவகர் பொன்னி அறக்கட்டளை முத்துக்குமார் தலைமை தாங்கினார். பாஜக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்.சதீஷ் தண்ணீர் பந்தலலை திறந்து வைத்தார், தமிழ் தேசிய கட்சி நிறுவனத் தலைவர் தமிழ்நேசன் பானகம் வழங்கினார், பாஜக மாவட்ட தலைவர் தொழில் பிரிவு பொன்.மாரியப்பன் நீர் மோர் வழங்கினார். முன்னதாக பாஜக மாநகர மேற்கு மண்டல் தலைவர் எஸ்.மாயாதேவி வரவேற்றார். மருத்துவர் ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் பாஜக மாவட்ட பொருளாளர் விநாயகம், விளிம்பு நிலை மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனத் தலைவர் சுரேஷ் (எ) ஜெயச்சந்திரன், பாஜக நிர்வாகிகள் சுபச்சன் பிரபு, ரஞ்சித், பாலசெல்வம், லதா, சதீஷ்குமார், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஆம்பல் ராதா பரத், பாமக மருத்துவக் கல்லூரி செயலாளர் ராஜாராமன், அகில இந்திய யாதவர் மகாசபை மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், நெய்தல் பகுதி தலைவர் துரை சின்னையன், மத்திய சங்க பொருளாளர் பாலதண்டாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் கபிலன் காமராஜ் நன்றி கூறினார்.