பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் குன்றின் மேல் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலை 11 மணியளவில் பால்குடம் எடுத்தல் காவடி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன
இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று ஸ்ரீ பால தண்டாயுதபாணியை சிறப்பு வழிபாடு செய்தனர், இதனைத்தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாலை 3 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது