எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின் கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலச்சாலை ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம் ஆ தொழுகைக்குப் பின்னர் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த சட்ட மசோதவை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்து கருப்பு பேஜ் அணித்து மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் மேலச்சாலை ஜாமியா மஸ்ஜித் அருகே நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
இதே போல் சீர்காழியை சுற்றியுள்ள கோவில்பத்து, திருமுல்லைவாசல் தைக்கால், புதுப்பட்டினம், பெருந்தோட்டம், புத்தூர் உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களின் முன்பு இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.