மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பெருவிழா தேரோட்டம். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் உள்ளிட்ட நிரளான பக்தர்கள் வடம் பிடித்திழுத்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாலங்காட்டில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார்குழலி அம்பிகை உடனாகிய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர பெரும் திருவிழாவின் சிகர விழாவான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது..
2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தேரினை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார்.
தேர் கோவிலில் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து நிலையை அடைந்தது. தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.