இரண்டு செட் சீருடை பெற்றதில் மாணவர்கள் மகிழ்ச்சி
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சீருடை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் வினிதா வழங்கினார் .
இரண்டு செட் சீருடைகளை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.