மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் சுமதிநாத் திருவுருவச் சிலையை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலில் சிறப்பு வழிபாடு:-
மயிலாடுதுறை நகரில் 500க்கும் மேற்பட்ட ஜெயின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மகாவீர் ஜெயந்தியான இவர்களின் தெய்வமான சுமதிநாத் திருவுருவச் சிலை அலங்கார ரதத்தில் எழுந்தருள செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து கோயிலுக்கு வந்த திருவுருவச் சிலைக்கு ஜெயின் சமூகத்தினர் அட்சதை தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் சுமதிநாத் உற்சவர் கோயிலில் எழுந்தருள செய்யப்பட்டு, மூலவருக்கு சிறப்பு தீபதூப வழிபாடு நடைபெற்றது. இதில் ஜெயின் சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர்.