பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் புளியக்குடி வடக்குதோப்பு கிராமங்களில் தார் சாலை, குடிநீர் வசதி அமைத்து தரக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் புளியக்குடி, வடக்கு தோப்பு புளியக்குடி கிராமங்களில் குண்டு குழியுமாக தரமற்ற முறையில் உள்ள சாலைகளை தார்சாலையாக அமைத்து தரக்கோரியும் உப்புகுடிநீராக வருவதை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றி அமைக்கக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற இளைஞர்கள் கோபால், மணிகண்டன், சிபிஐ கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட துணை தலைவர் பிரதீப் குமார், சிபிஐ கட்சி மெலட்டூர் நகர செயலாளர் குருசிவா, தாமரைச்செல்வி மாதர் சங்கம் மற்றும் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.