சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கி பாடல் ஒப்புவித்தல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவ, மாணவியர் ஸ்டெபி, யோகேஸ்வரன், முகல்யா , நந்தனா, ஹாசினி, ஜாய் லின்சிகா, விஜய் கண்ணன், சாதனா ஸ்ரீ உட்பட பலர் பரிசுகளைப் பெற்றனர். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.