மயிலாடுதுறை செய்தியாளர்
இரா.மோகன்
மயிலாடுதுறை
தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு.வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம், ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஒருவேளை உணவு ரூ.10-க்கு வழங்கும் வகையில் அதிநவீன சமையல் உபகரணங்களுடன் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்ட “திருவடி உணவுச் சாலை” யை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்குனி உத்திர திருநாளான இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.இந்த உணவுச் சாலையில் வயோதிகர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.