யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கோவை மண்டல அலுவலகத்தை யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மணிமேகலை திறந்து வைத்தார்

கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா தனிநபர் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன் என பல்வேறு புதிய திட்டங்களுடன் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது..

இந் நிலையில் தொழில் நகரமான கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய கோவை மண்டலம் அலுவலகம் இராமநாதபுரம் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது..

19 வது மண்டல அலுவலகமாக துவங்கப்பட்டுள்ள,இதற்கான துவக்க விழாவில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குனர்,மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் மணிமேகலை கலந்து கொண்டு புதிய மண்டல அலுவலகத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்..

இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார்,சென்னை மண்டல தலைவர் சத்யாபென் பெஹ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்..

கோவை,திருப்பூர்,திருச்சி,மதுரை,திருநெல்வேலி,உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் 280 கிளைகளை உள்ளடக்கிய கோவை மண்டல அலுவலமாக செயல்பட உள்ளது..

விழாவில் பல்வேறு கிளை வங்கி மேலாளர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *